“காமராஜை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?” – தமிழருவி மணியன்
ஒரே கேள்வி ஒரே பதில்!
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்ஃபோன்ஸ், ”காமராஜ் உதயநிதி எனக்கு ஆட்சியை வழங்கினாலும் மகிழ்ச்சிதான்” என்று கூறியிருப்பதை எப் படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘காமராஜ் மக்கள் கட்சி’த் தலைவர் தமிழருவி மணியன் அளித்த பதில்:
பிறந்த தொட்டு நாள் வரை காங்கிரஸ்காரனாகவே இருக்கிறேன் என்பதைப் பெருமிதத்தோடு பதிவு செய்து விட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாக, தான் கலைஞரின் ஆதர வாளர் என்று நண்பர் பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறியிருக்கிறார். உயிரை ஓரிடத்திலும், உடலை வேறொரு இடத்திலும் வைத்து வாழ்வது எந்த வகை யிலும் மேன்மை யானதாகாது. தான் வாழ, தான் ஏற்றுக் கொண்ட கொள்கை. களை முற்றாகத் துறப்பவர்கள் ஒரு வகை; தன்னுடைய கொள்கை வெற்றி” பெற, சகலத்தையும் துறப்பவர்கள் இன்னொரு வகை. இரண்டாவது வகை மனிதராக இருந்திருக்க வேண்டிய பீட்டர், துரதிர்ஷ்டவசமாக முதல் வகை மனிதராகத் தன்னை மாற்றிக் கொண்டதுதான் வருத்தத்துக் குரியது.
“நண்பர் பீட்டர், கலைஞரைப் போற்றுவது குறித்தோ, இன்றைய முதல்வரைப் புகழ்வது பற்றியோ, ஏன் – உதயநிதிக்கு அவர் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது குறித்தோ எனக்கு எள்ளளவு வருத்தமும் இல்லை. வாழும் கலையில் வல்லவர் பீட்டர். எது வாழ்க்கை என்பதைத் தீர்மானிப்பது அவரவர் உரிமை. பீட்டர், தன் உரிமையின் படியே, விருப்பப்படியே வாழட்டும். ஆனால், “காந்தீயம்” என்பதும், ‘திராவிட என்பதும் ஒன்று என்பதும்; ‘காமராஜ் ஆட்சி’யை ஸ்டாலின் தருகிறார், அதை உதய நிதி இன்னும் முழு மைப்படுத்துவார் என் பதும் அவரது மனச் சான்றுக்கு உகந்தது தானா என்பதே என் கேள்வி.
“அவரது இந்த வாக்குமூலம், காந்தீயம் பற்றிய புரிதலும் அவ ருக்கு இல்லை; காமராஜை அடி மனதின் ஆழம் வரை வைத்து நேசிக்கும் உணர்வும் அவரிடம் இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது. ‘இவ்வளவு குறைகளுக்குப் பிறகும் லண்டன் மாந கரை நான் நேசிக்கிறேன்’ என்றான் பைரன். அது போல், இத்தனை முரண்பாடுகளுக்குப் பின்னும், அவர் விரும்பிய வண்ணம் நல் வாழ்வு வாழட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
“இறுதியாகச் சில வார்த்தை நண்பர் பீட்டர் பைபிளை கள் நிச்சயம் வாசித்திருப்பார். ‘ஆன் மாவை விற்று அகிலத்தைப் பெற்று என்ன பயன் என்று பைபிளில் கர்த்தர் கேட்டிருப்பார். கர்த்தரின் இந்த வாசகத்தை பீட்ட ருக்கு காணிக்கையாக்குகிறேன்.
”நெடுநாள் நண்பர் என்ற முறையில் அவருக்கு ஒரு வேண்டுகோள் – காந்தியையும், காமராஜை யும் அவமானப்படுத்தும் காங்கிரஸ் காரராக இருப்பதை விட, அவருடைய ஆன்மா விரும்புகிற ‘திராவிட மாடல்’ அரசை வழங்குகிற அவரது தி.மு.க.விலேயே அவர் தன்னை இணைத்துக் கொள்வது நல்லது. அதை அவர் செய்வதன் மூலம், காந்தி யையும், காமராஜையும் இன்னமும் மனதில் வைத்து பூஜித்துப் போற்றுகிற நல்ல காங்கிரஸ்காரர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.
“காமராஜ் ஆட்சியைத் தருவோம்’ என்று இன்னமும் பேசி வருகிற காங்கிரஸ் கட்சி, ‘காமராஜ் ஆட்சியை தி.மு.க.வே தருவதாக’க் கூறுகிற நண்பர் பீட்டருடைய கருத்தை ஏற்பதானால், அந்த முழக்கத்தை கைகழுவி விடலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியா விட்டாலும், அல்லது ‘அவருடைய கருத்து, கட்சியின் கருத்து அல்ல’ என்று சொல்லி, மிஞ்சியுள்ள கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முற்படலாம்.”
தொகுப்பு: எஸ்ஸார்
துக்ளக்
4.1.2023
தமிழருவி மணியன்