சாலைகளை தரமாக சீரமைக்க முன்வர வரவேண்டும் – காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள்
சாலைகளை தரமாக சீரமைக்க முன்வர வரவேண்டும்!
வருடத்திற்கு வருடம் வாகனங்களின் எண்ணிக்கையும், வாகன நெரிசலும் அதிகரித்து கொண்டே வருகிறது, அரசு தரப்பில் சாலை பாதுகாப்புக்கான உரிய கட்டமைப்பு இல்லை என்பதை நாம் அறிவோம்! இருக்கின்ற சாலைகளையாவது தரமாக அமைக்க முன் வரவேண்டும்!
குறிப்பாக பாரதியார் வீதியின் இணைப்பு சாலையின் சந்திப்புகள் படுமோசமாக உள்ளது, இரண்டு சக்கரவாகன ஓட்டுனர்களை நிலைதடுமாற செய்து விபத்தை ஏற்படுத்துகின்றன! அப்பகுதிகளை சீர் செய்து இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களை விபத்திலிருந்து காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்,
1.ஜீவானந்தம் வீதி பாரதியார் வீதி சந்திப்பு
2.பிரகார வீதி பாரதியார் வீதி சந்திப்பு
3. இலைக்காரவீதி பாரதியார் வீதி சந்திப்பு
4.மார்கெட் வீதி பாரதியார் வீதி சந்திப்பு
5.டூப்ளக்ஸ் வீதி பாரதியார் வீதி சந்திப்பு
6.Drஅம்பேத்கார் வீதி பாரதியார் வீதி சந்திப்பு
7.தெய்த்தா வீதி பாரதியார் வீதி சந்திப்பு