மக்களை இழிவான நிலைக்கு கொண்டு செல்வது தான் திராவிட மாடலா? தமிழக மக்களை மது போதைக்கு அடிமையாக்கும் திராவிட மாடல் திமுக அரசு!
இந்தத் தமிழ்நாடு தலைகுனிய திராவிட மாடல் காரணமாக அமைந்துள்ளது. ஒரு மனிதன் சுகாதாரமாக இருக்க, குளிப்பதற்கு காலை ஆறு மணி முதல் 9 மணி வரை நீர் வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு நீர் வருவதில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் வருமானத்தை பெருக்குவதற்காக, காலையிலேயே, டாஸ்மாக் கடையை, மதுக்கடையைத் திறங்கள் என்று கோரிக்கைகள் வருவதாக சப்பைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.
அப்படி கோரிக்கை வைப்பவர்களின் முழு விவரங்கள், வெள்ளை அறிக்கை, இந்த தமிழ்நாடு திராவிட “ஆடல்” அரசு வெளியிட முடியுமா?? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்?. என்ற எம்ஜிஆர் படப் பாடலை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த முத்துசாமி மறந்து விட்டார் போலும்!
காலை 7 மணி முதல் 9 மணி வரை கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் நபர்களின் விபரங்கள் எங்கே???? அந்த கோரிக்கை மனுக்கள் வெள்ளை அறிக்கை விவரங்களாக வெளியிட முடியுமா ?? தமிழ்நாடு அரசு மதுவிலக்கு துறை அமைச்சர் பெருமகனார் அவர்களே!
மதுப்பழக்கமே கூடாது என்று காமராஜர் மக்கள் கட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கும் பொழுது, மது வருமானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. போதையற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம் என்று முதல்வர் முழங்குவது உண்மையானால், டாஸ்மாக் மதுபானக் கூடங்களின் நேரத்தை அதிகரிப்பது குறித்து அரசு, சிந்திக்கவே கூடாது.
மக்களுக்கு மாண்போடு நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள். மக்களை இழிவான நிலைக்கு கொண்டு செல்வதற்கு ஆட்சி அல்ல என்பதை காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.
பா குமரய்யா மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி