சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு விழாவில் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு காமராஜர் விருது
17/08/2023 ; சென்னை மகாஜன சபை
சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு முப்பெரும் விழா 17/08/2023 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நாரதர கான சபா டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் வரவேற்புரை திரு P. சந்திரசேகர் பொதுச் செயலாளர் அவர்கள் வழங்கினார். இவ்விழாவிற்கு தலைமை திரு Dr.ஜி செல்வகுமார் தலைவர் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் திரு M.R கௌரிசங்கர் , பொருளாளர் திரு J.J மோகன் இணைச்செயலாளர், திரு J.S நாராயணசாமி, திரு எஸ் ஆர் சுந்தரம் செயற்குழு உறுப்பினர், திரு எஸ் சிவப்பிரகாசம் செயற்குழு உறுப்பினர் திரு D வெள்ளத்துரை செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
138 வது வருட சென்னை மகாஜன சபை வரலாற்றுச் சுருக்கம் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் Dr. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் உரையாற்றிய ” உன் அரும்பெரும்பெறும் இலட்சியம் நாளைய வரலாற்றை உருவாக்கும்” ஆகிய இரண்டு புத்தகங்க வெளியீடு நடைபெற்றது.
காமராஜர் விருது மற்றும் மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் மேதகு ஜார்கண்ட் மாநில ஆளுநர் மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள், புத்தகங்களை வெளியிட்ட , புத்தகங்களை பெற்றுக் கொண்டவர் உயர்திரு ஜீ.கே.வாசன் எம்.பி அவர்கள் ராஜ்யசபா உறுப்பினர் , முன்னாள் மத்திய அமைச்சர். விழாவில் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு.உயர்திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. காமராஜர் விருதை பெற்றுக் கொண்ட திரு. தமிழருவி மணியன் அவர்கள் விழாவில் காமராஜர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற திட்டங்களை பற்றி மாணவ மாணவியரிடம் விரிவாக எடுத்துரைத்து விழாவை சிறப்பித்தார். தொடர்ந்து தலைவர்களின் சிறப்புரை மற்றும் பேரரையும் நடைபெற்றது. பாரதியார் பேச்சுப்போட்டி ,பாட்டு போட்டி ,ஓவியப் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுழற் கேடயங்களும் ,பரிசுகளும், நற்சான்றுகளும் வழங்கப்பட்டது.
சமூக ஆர்வலர்களுக்கு சென்னை மகாஜன சபை நினைவு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 30 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் ,10 மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவியருக்கு உதவி தொகை வழங்கும் விழாவும், 50 மேடை மெல்லிசைக் கலைகளுக்கு உதவி தொகை வழங்கும் விழாவும் நடைபெற்றது.
விழாவிற்கு நன்றி உரை W.S மோகன் செயற்குழு உறுப்பினரும் தொகுப்புரை பொன்.லட்சுமி மற்றும் டி பாஸ்கர் அவர்களும் வழங்கினர்.இவ்விழாவிற்கு பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.