காமராஜர் மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவராக திரு கா.ரே. வெங்கடேஷ் நியமனம்
05/08/2023 ; கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஐந்து தாலுகாக்களில் பத்து தொகுதிகளைக் கொண்டுள்ளது. 9 பிப்ரவரி 2004 அன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி அணை (கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திட்டம்) 1958-ல் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கிருஷ்ணகிரி அணை நகருக்கு 6 கி.மீ. அருகில் அமைந்துள்ளது.
இங்கு மா சாகுபடி 300,17 சதுர கிமீ பரப்பளவு கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டம். முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகும். மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒரு பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் விளைவிக்கின்றது. மாம்பழம் பதப்படுத்தும் தொழில் அத்துடன் வளர்ந்து வருகின்றது.
காமராஜர் மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவராக திரு கா.ரே. வெங்கடேஷ் (80505 97657) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்,அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.