காமராஜர் மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்டத் தலைவராக திரு ஹரிபாஸ்கர் அவர்கள் நியமனம்
5/08/2023 ; அரியலூர்
அரியலூர் வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்த பகுதி இம்மாவட்டத்தை உள்ளடக்கியது. நிண்ணியூர் , ஓட்டகோவில், விளாங்குடி, விக்கிரமங்கலம், அரியலூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, திருமழபாடி, தத்தனூர் பொட்டகொல்லை,குணமங்கலம், மேலப்பழுவூர், கண்டிராதீர்த்தம், துளார் ஆகிய கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகள், பெருங்கற்களாலான பாத்திரங்கள் மற்றும் மண்பாண்டங்கள் வடிவில் உள்ளவை பண்பாட்டுத் தடயங்களாகின்றன.
சங்க காலத்தில் உறையூரை ஆண்ட சோழர்கள், கொல்லிமலையை ஆண்ட வில்வித்தையில் சிறந்தவரான மழவர் தலைவன் ஒரி ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்தது. . இன்றைய அரியலூர் மாவட்டம், பெருமைமிகு சோழர்களின் தொடக்க காலம் முதல் இறுதி காலம் வரை அவர்களது ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. சோழ அரசர்களான முதலாம் ஆதித்யன் (871-907) முதல் மூன்றாம் இராஜேந்திரன் (1246-1279) வரையிலான காலங்களில் பொறிக்கப்பட்ட 450 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இம்மாவட்டத்தில் கிடைக்கபெற்றுள்ளன. இவை சோழர்கால ஆட்சியின் அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. சோழ அரசர்களான முதலாம் ஆதித்யன் முதல் முதலாம் இராஜேந்திரன் வரை இவர்களின் ஆட்சியின் கீழ், நிலக்கிழார்களாக இருந்த பழுவேட்டரையர்கள் மேலப்பழுவூரை தலைநகராகக் கொண்டு அரியலூரை ஆண்டு வந்தனர்.
காமராஜர் மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்டத் தலைவராக திரு செ ஹரிபாஸ்கர் (82201 38831) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.