உதகை மத்திய பேருந்து நிலையத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக போக்குவரத்து கழக சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உதகை ; மத்திய பேருந்து நிலையம்
காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு
சங்கத்தினருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட அரசு போக்கு வரத்து கழகத்தில் பல்வேறு சீர்கேடுகள் இருப்பதாக கூறி, உதகை மத்தியப் பேருந்து நிலையத்தில் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காமராஜர் மக்கள் கட்சி மாநில மகளிர்அணிதலைவர் வள்ளிரமேஷ் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு.மனோ கரன் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் பேருந்து களின் எண்ணிக்கையைஅதிகரிக்க வேண்டும்.மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை விரி வாக்கம் செய்ய வேண்டும். விரைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண் டும். மினி பேருந்துகளை ரத்து செய்து அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும். தரம் இல்லாத பேருந்துகளை நிறுத்திவிட்டு தர மானபேருந்துகளை இயக்கவேண் டும், கோவை, மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை, சிஐடியு சங்க நிர்வாகி ராமன் குட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.