காமராஜர் மக்கள் கட்சியின் ஜெயங்கொண்டம் தொகுதி மகளிர் அணித் தலைவராக, திருமதி மாலதி இராஜேந்திரன் அவர்கள் நியமனம்
அரியலூர் 26/09/2023
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக பரப்பளவும், அதிக வாக்காளர்களையும் கொண்ட தொகுதி ஜெயங்கொண்டம்.
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டிடக் கலையின் சான்றாக விளக்கும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் இத்தொகுதியில் உள்ளது.
இந்த தொகுதியில் 30 சதவீதம் வன்னியர்களும், 28 சதவீதம் தலித்துகளும் அளவில் உள்ளனர். இது தவிர, முதலியார், உடையார், மூப்பனார் ஆகிய சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக திருமதி மாலதி இராஜேந்திரன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.