ஒசூர் தொகுதி மகளிர் அணித் தலைவராக, திருமதி வேல்ப்ரியா சிவசெல்வம் அவர்கள் நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து உருவானது. இந்த மாவட்டம் பசுமையான பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் குன்றுகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. ‘கிருஷ்ணா’ என்பது ‘கறுப்பு’ என்றும் “கிரி” என்பது ‘மலை’ என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ண தேவா ராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது, எனவே இந்த மன்னர் பெயரிடப்பட்டிருக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 5143 சதுர.கி.மீ.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக திருமதி வேல்ப்ரியா சிவசெல்வம் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோ