நீலகிரி மாவட்ட மகளிர் அணித் தலைவராக, செல்வி இந்திரா அவர்கள் நியமனம்
நீலகிரி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக செல்வி இந்திரா அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஆகும்.
இம்மாவட்டத்தில் வெல்லிங்டன் பாசறை நகரம் உள்ளது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக நீலகிரி பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ளமை நீலகிரிக்குப் பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும்.