காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச மனு
காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் ஐயா அவருடைய 75 வது .பிறந்த தினத்தை முன்னிட்டு காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக மக்களுக்கு முதியோர் உதவித்தொகை மனுக்கள் இரண்டு நாட்களுக்கு இலவசமாக எழுதி தரப்பட்டன.
இந்தப் பணி மாவட்டத் தலைவர் அருள் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . பொது மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து அவர்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் மனு ஆகியவை இலவசமாக எழுதி தரப்பட்டன .இந்த நிகழ்வில் மாவட்ட மற்றும் இளைஞர் அணி தொண்டர் அணி என நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கும் , சுற்றுப்புற சூழலை மேம்படுத்தவும் இலவச மரக்கன்றுகள் தருவதற்கான முன்னறிவிப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டமும் மாவட்ட தலைவர் திரு அருள் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.