காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பாக மக்களிடம் கையெழுத்து
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் காளையப்பன் நகர் செல்லப்பநாயகர் நேதாஜி நகர் குறிஞ்சி நகர் கே. வி .எஸ் நகர் லீடர் ஸ்கூல் பின்புறம் உள்ள சாலைகள் 75% சாலைகளை செம்மண்ணா கிடக்கும் சாலைகளை செப்பனிடக் கோரி , மாவட்டஅரசு மருத்துவமனையில் கேண்டீன் வசதி செய்து தரக் கோரி பேயான்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சென்று வரும் பொது மக்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்து தரக்கோரி காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொடுக்க , மனுவில் பொதுமக்களிடம் கல்லூரி பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. மேற்கூறும் இடங்களுக்கு சென்று வர பொதுமக்களுக்கு சுற்றுவட்ட பேருந்து இயக்க கோரி காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பாக மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டன.