தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காவல் நிலையத்தில் ஒரே நாளில் புகார் மனு
12/07/2024
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் பெயரில் போலியான முகநூல் பக்கம் தொடங்கி சமூகத்திற்கு எதிரான கருத்துகளையும் தவறான தகவல்களையும் திரு தமிழருவி மணியன் அவர்கள் கூறும் படியாக சித்தரித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் முகநூல் பக்கத்தை முடக்கவும்,அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் காவல் நிலையத்தில் சைபர் கிரைம் புகார் மனு அளித்தனர்.
தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் பெயரில் இயங்கி வரும் போலி முகநூல் பக்கத்தை முடக்கக் கோரி சென்னை மண்டல காமராஜர் மக்கள் கட்சி சார்பாக, சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் திரு.குமரய்யா, மாநிலச் செயலாளர்கள் திருமதி.மீனா ஞானசேகரன், திரு.ரெங்கராஜன், மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி இராதிகா மோகன்,மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் திரு.மோகன்குமார் தலைமை அலுவலகச் செயலாளர் திரு.கோடீஸ்வரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் திரு.வாசு, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் திரு.இரவிச்சந்திரன், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவர் திரு.மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி தவறான கருத்துக்களை வெளியிட்டு வரும் நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது, புகார் மனுவிற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை SP அலுவலகத்தில் மாவட்டதலைவர் அண்ணாமலை தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் அதனைத் தொடர்ந்து & கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் இரா. கதிரேசன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட SP அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்களின் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி தவறான கருத்துகளை (பரப்புதல்) வெளியிட்டு வரும் நபரை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி 12/07/2024 ஆம் நாள் மாலை 4 மணிக்கு மனு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காமராஜ் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பெத்ராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகம் , சைபர் க்ரைம் பிரிவு அலுவலகத்திலும் புகார் மனு ஒன்று அளித்தனர்.