தொகுதி வரையறை தொடர்பான கூட்டத்திற்கு, கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அடிப்படை என்ன?
26/02/25
மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்!
நாடாளுமன்றத் தொகுதி வரையறை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை மார்ச் 5ஆம் தேதி தாங்கள் கூட்ட இருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம். அவற்றில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளும், பதிவு பெற்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளன. அவை, எந்த அடிப்படையில் அழைக்கப்பட்டு உள்ளன என்பதைத் தாங்கள் விளக்கிட வேண்டும்.


இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியாக, திரு தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் இயங்கும் காமராஜர் மக்கள் கட்சி தமிழகத்தில் உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு காமராஜர் மக்கள் கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதற்கான காரணத்தை தெளிவுபடுத்துவதுடன், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காமராஜர் மக்கள் கட்சிக்கு உடனடியாக அழைப்பு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் பா குமரய்யா,மாநிலப் பொதுச் செயலாளர்.