காரைக்கால் திருநள்ளார் ரோடு, மாரியம்மன் கோயில் வீதி சந்திப்பு மோசமாக மிக மோசமான நிலையில் சாலைகள்
13/3/2025
காரைக்கால் மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள், காரைக்கால் நகராட்சியின் செயல்பாடுகள் மக்கள் பணிகள் தோய்வு குறித்தும் தொடர்ந்து அறிக்கைகளும் ,காமராஜர் மக்கள் கட்சி இஸ்மாயில் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்களும் கொடுத்து வருகிறது.
காரைக்கால் திருநள்ளார் ரோடு, மாரியம்மன் கோயில் வீதி சந்திப்பு மிகவும் மோசமாக உள்ளது, அதனால் அங்கு சிறுசிறு விபத்து அடிக்கடி ஏற்படுகிறது! கல்லூரி, பள்ளி, மார்கெட், செல்பவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற பகுதி! காரை நகராட்சி அப்பகுதியை சமன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.
