கள்ளக்குறிச்சி மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை , சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுநெமிலி,பஞ்சாயத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிறுத்த நிழல் கூடம் (கான்கிரீட்) அமைத்து தர வேண்டி கொடுக்கப்பட்ட மனுவிற்கு நடவடிக்கை இல்லை

1/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை , சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுநெமிலி,பஞ்சாயத்தில் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். நாள்தோறும் போக்குவரத்து தேவைகளுக்காக உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலம் சாலை – விருத்தாச்சலம் மற்றும் உளுந்தூர்பேட்டை சாலை பேருந்து நிறுத்தத்தில் மக்கள் அதிக நேரம் காத்திருப்பு நிலை ஏற்படுகிறது.

 மேலும் பள்ளி ,கல்லூரி செல்லும் மாணவ மாணவியரும் காலையிலும் மாலையிலும் வெயில் நேரங்களில் சாலையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் வயதானவர்களும் நிழல் கூடல் இல்லாததால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

 மேலும் பேருந்து நிறுத்த கூடம் இல்லாததால் பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.

 இதனை கருத்தில் கொண்டு எங்கள் ஊர் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு எம்ஜிஆர் சிலை அருகில் ( காட்டு நெமிலி )பேருந்து நிழல் கூடம் கட்டித் தர தாங்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் இதில் நேரில் ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்காமல் மக்களின் பயன்பாட்டிற்கு பேருந்து நிலைய கூடம் அமைக்காமல் அரசு அலைக்கழிப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *