பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ற தத்துவம் உலக முழுவதும் தோல்வியடைந்த, சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டமாகும்
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ற தத்துவம் உலக முழுவதும் தோல்வியடைந்த, சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டமாகும் என்று ஆய்வாளர்களும், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பயனற்றது, அது தோல்வி அடைந்த தத்துவம் என 2000 ஆவது ஆண்டில் உலக வங்கி அறிவித்து உள்ளது என்பதை நாளிதழ்கள் மூலம் நாம் அனைவரும் அறிந்துள்ளோம்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்கால் புதுத்துறை கிராம தாயார் காலனி, தாயார் நகர், உதயம் கார்டன், டைமண்ட் நகர், சமீர் நகர், கரீம் நகர், கோல்டன் நகர், வி.எஸ்.நகர் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில், குளுனி மருத்துவ மனை அருகில் அரசு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் ஆரம்பக்கட்ட பணியை துவங்கி உள்ளது, அப்பகுதி மக்கள் தாங்கள், மற்றும் சந்ததினர் சுகாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ, நிலத்தடிநீர் மாசுபட்டுவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள்! இவ்வேலையை ஆரம்பக்கட்ட பணியுடன் நிறுத்தி குடியிருப்பு இல்லாத பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள் அரசு ஆவனசெய்ய வேண்டுகிறோம்,
மேலும் 15அடி உயரத்தில் அணை எழுப்பி சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுநீர் அணையின் தடுப்பு சுவர் இடிந்து கழிவுநீர் ஓடியதால் அதில் சிக்கி 10பேர் உயிர் இழந்த சம்பவம் 2015ம் ஆண்டில் இராணிப்பேட்டையில் நடந்தது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன், குடியிருப்பு இல்லாத பகுதியில் இது போன்ற நிலையங்கள் அமைப்பது சிறந்தது!!