தொகுப்புகள்
தேனி மாவட்டத் தலைவர் நியமனம்
தேனி மாவட்டத் தலைவராக திரு நாட்ராயன் அவர்கள் நியமனம் காமராஜர் மக்கள் கட்சியின் நேனி மாவட்டத் தலைவராக திரு இரா நாட்ராயன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு.
Read moreஆலந்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவர் நியமனம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு மணிவண்ணன் அவர்கள் நியமனம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக திரு இரா மணிவண்ணன் (R Manivannan)
Read moreகாமராஜர் மக்கள் கட்சி அலுவலக திறப்பு
காமராஜர் மக்கள் கட்சி அலுவலகம் தலைவர் தமிழருவி அவர்களால் ஜூலை 28, 2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.
Read moreகாமராஜர் மக்கள் கட்சியில் இணைந்திட அழைக்கிறேன்
அன்புடையீர்! வணங்கி மகிழ்கிறேன். பண அரசியலும், வெறுப்பு அரசியலும் முற்றுகையிட்டிருக்கும் தமிழகத்தில், மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான நல்லரசியலை வளர்த்தெடுப்பது நம் கடமையாகும். நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல் கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த, அர்ப்பணிப்புடன் கூடிய மக்களை ஒன்றுதிரட்ட, மிகக் கடுமையாக ஓர் தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும். 53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல், ஒழுக்கம் தவறாமல், அரசியலைப் பயன்படுத்தி ஒரு ரூபாயும் அறத்திற்குப் புறம்பாகச் சேர்க்காமல் காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான். என் நெடிய அரசியல் பயணத்தில் இன்றுவரை ஓர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் கூட நான் நின்றதில்லை. என் இனம் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தரிசிக்க வேண்டும் என்பதற்கு மேல் எந்தக் கனவும் எனக்கில்லை. நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப் போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது இமாலயத் தவறு என்று உணர்கிறேன். தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு என்று சுயநலமாக வாழ என் மனச்சான்று அனுமதிக்கவில்லை. “போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்” என்று முழு அர்ப்பணிப்புடன் காமராஜர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய என்னை நான் முற்றாக அர்ப்பணித்துவிட்டேன். காமராஜர் ஆட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நடக்க நான் உருவாக்கிய காந்திய மக்கள் இயக்கம், இன்று முதல் ‘ காமராஜர் மக்கள் கட்சி ‘
Read more