பெண்களை அவமதிக்கலாமா? அமைச்சரே!

பெண்கள் முன்னேற்றம் அடைவதே திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்சியில், வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளர், உயர் கல்வித் துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள், பெண்களுக்கு வழங்கப்படும் இலவசப் பேருந்துப் பயணச் சலுகையை ஓசிப் பயணம் என்று பேசியது கண்டனத்திற்கு உரியது.

ஏற்றப்பட்ட மின் கட்டணம் கொடுத்த அதிர்ச்சியை விடவும் வலி தரும் வார்த்தைகள் இவைகள்; ஒட்டுமொத்த தமிழகப் பெண்களின் தன்மானத்தை தகர்க்கும் சொல்லாகவே காமராஜர் மக்கள் கட்சி பார்க்கிறது; கண்டனங்களைப் பதிவு செய்கிறது.

திருமதி மீனா ஞானசேகரன்

மகளிர் அணி மாநிலச் செயலாளர்,

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *