இன்றைய தேவை, காமராஜர் மக்கள் கட்சி!

அன்புடையீர்!

வணங்கி மகிழ்கிறேன்.

நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல்கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தஅர்ப்பணிப்புடன் கூடிய மக்களை ஒன்று திரட்டஓர் அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். 

53 ஆண்டுகள் நேர்மை தவறாமல், ஒழுக்கம் தவறாமல், காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான். என் இனம் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தரிசிக்க வேண்டும் என்பதற்கு மேல் எந்தக் கனவும் எனக்கு இல்லை.

ஊழல் அற்ற  நல்லரசியல் இந்த மண்ணில் செழிக்க வேண்டும், இனத்தின் நலன்களையும், மாநில உரிமைகளையும் பறி கொடுக்காமல் தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்று சிந்திப்பவர்கள், இனியும் மௌனப் பார்வையாளர்களாக இல்லாமல், காமராஜர் மக்கள் கட்சிக்கு வலு சேர்த்திட அன்புடன் அழைக்கிறேன்.

இதன் ஒரு பகுதியாக வரும் ஜூலை மாதம் 16ஆம் தேதி (16/07/2023)ஞாயிற்றுக்கிழமைமதுரை மாநகரில் காமராஜர் மக்கள் கட்சியின் மாநிலப் பொதுக்குழுவும்மாநாடும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடந்திட, தங்களின் மேலான பங்களிப்பை வேண்டுகிறேன்.

அன்புடன்,

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *