‘தீரர் சத்தியமூர்த்தி’ அவர்களின் 80வது நினைவு நாள்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அரசியல் வழிகாட்டி, சென்னை மக்களின் தாகம் தீர்க்க, பூண்டி நீர்த் தேக்கத் திட்டத்தைக் கொண்டு வந்தவர், சென்னை மாநகரத்தின் மேனாள் மேயர், சென்னை மாகாண சட்டசபையின் மேனாள் உறுப்பினர், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 80வது நினைவு நாளில் ( இன்று 28 03) , சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக சென்னை, காஞ்சி மண்டலத் தலைவர் திரு இரா ரெங்கராஜன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் திரு தீ இரவிச்சந்திரன், மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி மீனா ஞானசேகரன், தலைமை அலுவலகச் செயலாளர் திரு ச கோட்டீஸ்வரன் மற்றும் திரு வர்ஷன், திரு பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அன்புடன்,
பா குமரய்யா
மாநிலப் பொதுச் செயலாளர்