காமராஜர் மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு. பெத்தராஜ் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு மனு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை வசதிகள் சுகாதார சீர்கேடுகள் , பொது இடங்களில் மது பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த காரணத்தினால் காமராஜர் மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு.பெத்தராஜ் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட பொது இடங்களில் மது அருந்துவதை கண்டித்தும் ,மக்கள் குடியிருப்புகளில் அருகே சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், சாலைப் போக்குவரத்து மற்றும் சாலைகளை சீர்படுத்தவும், குப்பை கழிவுகளை முறையாக பராமரிக்கவும் , இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், பொது இடங்களில் செயல்படும் டாஸ்மார்க் கடைகளை அகற்ற பிரச்சாரங்களும் நடைபெற்றது.