தமிழ்நாட்டில் தள்ளாடாத மதுவிலக்குக் கொள்கை தேவை!

பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக மிட்டாய் வழங்குவது போல், 500 டாஸ்மாக் கடைகளை மூடத் தமிழக அரசு முன் வந்துள்ளது. தமிழக அரசுக்கு நமது நன்றிகள் உரித்தாகுக! ஆனால், இத்தோடு தமிழக அரசின் பணி நிறைவு பெறவில்லை. மீதமுள்ள 4829 கடைகளை மூடுவதற்கான செயற்திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக மதுக் குடிப்பகங்கள் நடப்பதை இன்னும் ஏன் அனுமதிக்க வேண்டும்? அவற்றை இழுத்து மூடத் தயங்கக் கூடாது.

எந்தக் கடையில் பொருள் வாங்கினாலும் இரசீது கிடைக்கும். ஆனால் டாஸ்மாக்கில் மட்டும் அது கிடைக்காது. தமிழக அரசின் வணிகவரித் துறைக்கு, கலால் துறைக்கு இதைப் பற்றிக் கவலை இல்லை. மதுபானங்கள் வாங்கும் நபருக்கு இரசீது தரப்பட வேண்டும். இதன் மூலம் முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜன் அவர்கள் குறிப்பிட்டது போல் அரசுக்கு வரவேண்டிய முப்பதாயிரம் கோடி ரூபாய் வருவதற்கு வழி பிறக்கும். தவறுகள் நடக்கிறது என்று தெரிந்தாலும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசை எப்படி மதிப்பிடுவது என்று தெரியவில்லை. மதுவிலக்குக் கொள்கையில் தள்ளாடாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *