சில நாட்கள் காத்திருக்கக் கூடாதா?
நாகப்பட்டினம் புறவழிச் சாலை விரிவாக்கத்தில் நடந்தது போலவே நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது வருத்தத்திற்குரியது. 20 ஆண்டுகள் பொறுத்து இருந்த நிறுவனம், இன்னும் சில நாட்கள் காத்திருக்கக் கூடாதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விவசாயிகளை அழைத்துப் பேசி, ஓர் இணக்கமான தீர்வை உருவாக்கி இருக்கலாம்.
என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடந்த முற்றுகைப் போராட்டம், நமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு என்ற வகையில் ஏற்கத்தக்கதே. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த கல்லெறிச் சம்பவங்களும், அதனால் விளைந்த காவல்துறை நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட்டு இருக்கலாம். மொத்தத்தில் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதில் மேலும் சிக்கலாகும் போக்கினைத் தவிர்த்திட மத்திய, மாநில அரசுகளும், என்எல்சி நிர்வாகமும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
வணக்கத்துடன்
பா குமரய்யா (தொடர்புக்கு: 98410 20258),
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி