நாமக்கலில் சாலை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தலைவர் திரு வடிவேல் அவர்கள் மனு
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள மோகனூர் ரோட்டில் மேல் ஈச்சவாரிக்கு செல்லும் வழியில் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுகிறது. மேலும் மழைக் காலங்களில் பெரும் சிரமத்திற்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். லத்துவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட மோகனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மேல் ஈச்சவாடி ரோட்டிற்கு தார் சாலை அமைத்து தர வேண்டி நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு.வடிவேல் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு விடுத்துள்ளார்.

