இளித்த வாய்த் திராவிடர்கள் யார்?
பெங்களூரு ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை “கை” விடப் போவதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த இணைப்பினால் ஓசூர் முக்கியத்துவம் பெறும், கர்நாடகாவில் முதலீடுகள் குறையும் என்று கருதுவதால் இந்த கைவிடல் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
பெங்களூரு – ஓசூர் மெட்ரோ சேவை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுவதுடன், இந்த இரு நகரங்களுக்கு இடையே கல்வி, மருத்துவம், வர்த்தகம் போன்ற பணிகளுக்காகப் பயணிக்கும் மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். ஆனால், தேசியம் பேசும் காங்கிரசும் திராவிட எல்லைக்குள் அடங்கும் கர்நாடகமும், தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுவதைத் தட்டிக் கேட்காமல், கண்டும் காணாமல் திமுக அரசு அமைதி காக்கிறது;
தமிழக நலன்களை விட கூட்டணி தர்மம் தான் உயர்ந்தது என்ற “திராவிட மாடல்” கருத்தாக்கத்தில் மூழ்கியுள்ள, திமுக அரசு மௌனத்தை அடைகாக்கிறது.
ஏனைய மாநிலங்கள் எல்லாம் தங்கள் மாநில நலனைக் காப்பதில் உறுதியாக இருக்கும் போது, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று தொடர்ந்து தனது திராவிட சகோதரர்களால் வஞ்சிக்கப்படும் தமிழர்கள் “இளித்த வாய்த் திராவிடர்கள்” என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழக முதல்வர், தனது திராவிட சகோதரர்களுடன் பேசி தமிழக உரிமைகளை மீட்டுத் தர வேண்டும், தமிழக நலன்களை உறுதி செய்ய வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.