காமராஜர் மக்கள் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்டத் தலைவராக சிவ.ஹரிகிருஷ்ணன் அவர்கள் நியமனம்

05/08/2023 ; இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்கள், 288 கிராம ஊராட்சிகள், 330 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. பரப்பளவு 2.234 சகிமீ. தற்போது மக்கள் தொகை 12,10,277 பேர் வசிக்கின்றனர். பல்வேறு தொழில்கள் இம் மாவட்டத்தில் நடைபெற்றாலும் தோல் தொழிற்சாலைகள் அந்நிய செலாவணியை பெருமளவில் ஈட்டுகின்றன. ஆற்காடு பகுதியில் விளையும் கிச்சிலி சம்பா அரிசி உலகப் புகழ் பெற்றதாகும்.

காமராஜர் மக்கள் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்டத் தலைவராக திரு சிவ. ஹரிகிருஷ்ணன் (99658 97702) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *