காமராஜர் மக்கள் கட்சியின் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.கருப்பையன் அவர்கள் நியமனம்
8/08/2023 ; அரியலூர் – ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக பரப்பளவும், அதிக வாக்காளர்களையும் கொண்ட தொகுதி ஜெயங்கொண்டம்.
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டிடக் கலையின் சான்றாக விளக்கும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் இத்தொகுதியில் உள்ளது.


உடையார்பாளையம் பேரூராட்சி, வரதராஜன்பேட்டை பேரூராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஆண்டிமடம் தொகுதி ஜெயங்கொண்டம் தொகுதியில் சேர்க்கப்பட்டது.
நெல், கரும்பு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல், ஆண்டிமடம், செந்துறை பகுதிகளில் முந்திரி சாகுபடி அதிகம் உள்ளன. இதுதவிர மக்காச்சோளம், கடலை,உளுந்து, மலர், காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. கைத்தறி நெசவு, முந்திரிக் கொட்டையை பிரித்தெடுப்பது ஆகியவையும் பிரதான தொழிலாக உள்ளது.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதித்தலைவராக திரு கருப்பையன் அவர்கள் நியமனம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு இரா கருப்பையன் ( 70924 89070 ) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
