புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் ஆட்சி சாதனை மலர்
05/08/2013 ; புதுச்சேரி


ஜூலை 16 2023 அன்று மதுரையில் நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 9 ஆண்டு கால ஆட்சியின் சிறப்பு ,மக்களுக்கான பணிகள் மற்றும் சிறப்பு திட்டங்கள், கல்வி போன்ற துறைகளில் செய்த சாதனைகளை உள்ளடக்கிய புத்தகமலர் வெளியிட்டு விழா நடைபெற்றது.
இதில் காமராஜர் மக்கள் கட்சியின் மாநில ,மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் என பல்வேறு தளங்களில் இருந்தும் மக்கள் பங்கு பெற்றனர். மேலும் அரசியல் தலைவர்களும் காமராஜர் மக்கள் கட்சியின் மலர் வெளியீட்டு விழாவில் பங்கெடுத்தனர்.


காமராஜர் ஆட்சியின் ஒன்பது ஆண்டுகால மலர் புத்தகத்தை புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு K.லட்சுமி நாராயணன் அவர்களை கட்சி நிர்வாகிகளுடன் விழுப்புரம் மண்டல தலைவர் இரா.கதிரவன் அவர்கள் சந்தித்து 05/08/2023 காலை சிறப்பு மலரை அமைச்சருக்கு வழங்கினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் செ.வேலுச்சாமி மற்றும் து.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.