காமராஜர் மக்கள் கட்சியின் மதுரை தெற்கு தொகுதி மகளிர் அணித் தலைவராக, திருமதி இளமதி அவர்கள் நியமனம்
மதுரை 1/10/2023



இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.

சங்க காலம் எனக் குறிக்கப்படும் 4-ஆம் நூற்றாண்டு முதல் 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் .
மதுரை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
மதுரை மாவட்டம், தெற்கு தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக திருமதி இளமதி அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
