சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில், காந்தி ஜெயந்தி மரியாதை, காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,



நிகழ்வில்,மாவட்டத் தலைவர் அருளானந்து, மாநில மகளிர் அணி செயலாளர், ஐஸ்வர்யா சுரேஷ், மதுரை கிழக்குத் தொகுதி தலைவர், சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர், பூவை சம்பத், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி, பாஸ்கரன்,காரைக்குடி தொகுதி தலைவர் அழகர்,, தென் மண்டல இளைஞர் அணி துணைச் செயலாளர் அலெக்ஸ், ஆயூப் கான், மற்றும் ப லர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம், கடைவீதிகள், குன்றக்குடி, பல பகுதிகளில், உறுப்பினர் சேர்ப்பு துண்டு பிரசுரங்கள், பொதுமக்களிடத்தில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது,



மாவட்டத் தலைவர் அருளானந்து,மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், தென் மண்டல இளைஞரணி துணைச் செயலாளர், அலெக்ஸ், காரைக்குடி தொகுதி தலைவர் அழகர், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி பாஸ்கரன், காரைக்குடி நகர இளைஞர் அணி, ஆயிப் கான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பா சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாக்க கோரி,ஏழாம் கட்டமாகஇன்று காலை 10, அளவில் திருப்பத்தூர் காந்தி சிலை அருகில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழாவை துவக்கி வைத்த காமராஜர் மக்கள் கட்சி மாநில மகளிர் அணி செயலாளர் ஐஸ்வர்யா சுரேஷ், மாவட்டத் தலைவர் அருளானந்து தலைமையில் நடந்தது.


