காமராஜர் மக்கள் கட்சியின் கோவை மாவட்ட மாநகர் மகளிர் அணி தலைவர் நியமனம்
தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பாகும். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் ஆகும். இந்தியாவில் மும்பைக்கு அடுத்த அதிக தொழில் முதலீடுகளை கொண்டுள்ள ஓர் மாநகரம் ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி கிட்டத்தட்ட 148 வார்டுகளை கொண்டுள்ளது. இது சுமார் 306.4 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும்.
கோயம்புத்தூரில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன. பன்னாட்டு விமான நிலையம் அவினாசி சாலை வழியாக கோவை மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் சென்றடையும் விதமாக அமைந்துள்ளது.
கோவை மாநகரம் இதர மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவை தேசிய நெடுஞ்சாலை 47 மூலம் இணைக்கின்றது.
கோவை காரணம் பேட்டையில் இராணுவ விமான நிலையம் மற்றும் போர் உற்பத்தி தளவாட விமான நிலையமும் இங்கு அமைந்துள்ளது. நவம்பர் 24 கோவை மாநகரின் பிறந்த நாளாகும். கோயம்புத்தூரில் தான் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் திரையரங்கம் கட்டப்பட்டது. இந்தியாவின் தேசிய கீதமான (ஜன கன மன) பாடல் இரவிந்திரநாத் தாகூரால் முதன்முதலில் கவிதை வடிவில் பாடப்பட்ட பெருமைமிக்க நகரம் நமது கோயம்புத்தூர் ஆகும். ஆகையால் நம் பாரதத்தின் தேசிய கீதம் பாடிய முதல் இடம் என்ற பெருமையும் பெறுகிறது.
கோயம்பத்தூர் மாநகர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக திருமதி ச லெட்சுமி அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.