காமராஜர் மக்கள் கட்சியின் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி தலைவர் நியமனம்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய மாநகரம் கோயம்புத்தூர் ஆகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். . தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். சென்னை மாநகராட்சியைப் போலவே பல நகராட்சிகளையும் பல பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 754 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிட்சிகளில் வரி வசூலில் இரண்டாவது இடத்தை கொண்டுள்ளது.

தமிழகத்திலேயே எந்த ஒரு மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உண்டு. அது எந்த ஒரு மாநகராட்சியாக இருந்தாலும் அவற்றுக்கு என தனி சின்னம் (Corporation symbol) இருக்கும். அந்த சின்னத்தில் இந்திய தேசிய கொடியைக் கொண்டும் தேசியக் கொடியின் அசோக காலச்சக்கரத்தையும் கோயம்புத்தூர் மாநகராட்சி சின்னத்தில் மட்டுமே காண முடியும்.

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு ந பிரசன்னகுமார் (99659 63659)அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *