காமராஜர் மக்கள் கட்சி தொடர்ந்து போராடி டாஸ்மார்க் மது கடை அகற்றப்பட்டது
காரைக்குடி வ உ சி ரோட்டில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.இதற்கு அருகே டாஸ்மார்க் மது கடை எண் .7533 செயல்பட்டு வந்தது. அதிகமாக மக்கள் நடமாடும் பகுதியில் மது அருந்தி ரோட்டிலேயே படுத்து கிடப்பதால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் ,பெண்கள் ,பொது மக்கள் என பல அச்சம் ஏற்பட்டு பல இடையூறுகளுக்கு இடையே மதுக்கடை அகற்ற வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி தொடர்ந்து போராடி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தது.
காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அருள் ஆனந்த் மற்றும் இளைஞரணி தலைவர் அருள் அலெக்ஸ் தலைமையில் அப்பகுதியில் இருக்கும் மதுக்கடையை அகற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தொடர்ந்து புகார் மனு & போராட்டங்கள் நடத்தி வந்த காரணமாக தற்பொழுது மதுக்கடை அகற்றப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறது.