காமராஜர் மக்கள் கட்சி மகளிர் அணி சார்பாக பெண்ணே பேராற்றல் மகளிர் பயிற்சிப் பாசறை திருச்சி அஜந்தா ஓட்டலில் நடைபெற்றது

திருச்சி , நவம்பர் – 5

காமராஜர் மக்கள் கட்சி மகளிர் அணி சார்பாக 2023 நவம்பர் மாதம் 5ஆம் தேதி, ஞாயிறு காலை 10.30 மணி அளவில் பெண்ணே பேராற்றல் மகளிர் பயிற்சிப் பாசறை திருச்சி அஜந்தா ஓட்டலில் நடைபெற்றது. இந்த பயிற்சிப் பட்டறைக்கு திருமதி வள்ளி இரமேஷ், மகளிரணி மாநிலத் தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். திருமதி ஐஸ்வர்யா சுரேஷ், மகளிரணி மாநிலச் செயலாளர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

மாநாட்டில் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில், மாநில மகளிர் அணிச் செயலாளர்கள், திருமதி மீனா ஞானசேகரன், திருமதி கீதா பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் திருமதி சத்யசுந்தரி, கொளத்தூர் தொகுதித் தலைவர் திருமதி ராதிகா மோகன் தங்கள் கருத்துரைகளை வழங்கினார்கள். குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக் என்ற தலைப்பில் திருமதி. மீனா ஞானசேகரன் அவர்களும், மகளிரும் சட்டப் பாதுகாப்பும்

என்ற தலைப்பில் திருமதி. கீதா பழனிச்சாமி அவர்களும், மகளிரும் தொகுதி இட ஒதுக்கீடும் என்ற தலைப்பில் திருமதி இராதிகா மோகன் அவர்களும், மகளிரிடம் கட்சியை கொண்டு சேர்க்கும் வழிகள் என்ற தலைப்பில் திருமதி. சத்திய சுந்தரி அவர்களும், அரசியல் களத்தில் மகளிரின் பங்கு என்ற தலைப்பில் திருமதி வாசுகி சீனிவாசகம், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் அவர்களும் உறையாற்றினர்.

மகளிர் அன்றும் – இன்றும் என்ற தலைப்பில், மூத்த பத்திரிகையாளர் திரு ப திருமலை அவர்கள் கருத்துரை வழங்கினார்.

காமராஜர் மக்கள் கட்சி பெண்ணே பேராற்றல் மகளிர் பயிற்சிப் பாசறையில் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள், இன்றைய தமிழகத்தின் அவலநிலைக்கு காரணங்கள் என்னென்ன என்பதையும், அரசியலில் மகளிரின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி உமாராணி நன்றியுரை ஆற்றினார்.

பயிற்சிப் பாசறையில் மகளிர் சிறப்பு மலரை, மாநில மகளிர் அணித் தலைவர் திருமதி வள்ளி இரமேஷ் அவர்கள் வெளியிட மூத்த பத்திரிகையாளர் திரு ப திருமலை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் . மதுரை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி உருவாக்கிய, மதுரை தெற்கு தொகுதி தலைவர் திரு ப கா இளைய குமார் அவர்கள் இயக்கிய காமராஜரின் தொண்டன் என்ற குறும்படம் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களால் வெளியிடப்பட்டது. படக்குழுவினரையும், பங்கேற்று நடித்த காமராஜர் மக்கள் கட்சியினரையும், தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் பாராட்டி கைத்தறி ஆடை அணிவித்தார்.

பயிற்சிப் பாசறையில் கட்சியின் மகளிர் பிரதிநிதிகள், மாநில நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் எனப் பெருந்திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பயிற்சிப் பாசறைக்கான ஏற்பாடுகளை, மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு அருண்குமார் கணேசன் அவர்களும், திருச்சி மாவட்டத் தலைவர் திரு வி சந்திரன் அவர்களும், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் திரு கலியமூர்த்தி அவர்களும், திரு பிரபாகரன் அவர்களும் செய்திருந்தனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மதியம் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது

தேசியகீதத்துடன் பயிற்சிப் பாசறை நிறைவுற்றது.

அன்புடன்

திருமதி வள்ளி இரமேஷ்

மாநிலத் தலைவர் – மகளிர் அணி – காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *