தர்மபுரி மாவட்ட தலைவர் நியமனம்
1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து, தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.சங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில், இம்மன்னனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில், நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீர்த்தகிரியார் பிறந்த மாவட்டம்.தருமபுரி மாவட்டத்தில் தர்மபுரி மற்றும் அரூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய்க் கிராமங்கள் கொண்டது.
தருமபுரி ,அரூர்,பாலக்கோடு , பாப்பிரெட்டிப்பட்டி,பென்னாகரம் ,காரிமங்கலம்,நல்லம்பள்ளி
உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் – இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும்[2], 10 ஊராட்சி ஒன்றியங்களும், 251 கிராம ஊராட்சிகளும் கொண்டது. தருமபுரி நகராட்சி,பேரூராட்சிகள்,அரூர்,கடத்தூர்,காரிமங்கலம்,மாரண்டஅள்ளி
பாலக்கோடு,பாப்பாரப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டி,பென்னாகரம்,பி. மல்லாபுரம்,கம்பைநல்லூர் , ஊராட்சி ஒன்றியங்கள்-தருமபுரி,அரூர்,காரிமங்கலம்,மொரப்பூர்,பாலக்கோடு,நல்லம்பள்ளி பாப்பிரெட்டிப்பட்டி,பென்னாகரம்,கடத்தூர்,ஏரியூர்
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தில் 15,06,843 மக்கள் வசிக்கின்றார்கள்.இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தருமபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 68.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விடக் குறைவானது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மக்களவைத் தொகுதியும், பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி), பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி), தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி), பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி), அரூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி) என 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.
வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கருநாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
தர்மபுரி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராகத், திரு க சங்கர் (G Sankar – 96263 34474) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.