குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளம் கலைஞரின் கனவுத்திட்டமா!?
திமுகவின்அரசின் அலட்சியம், 50 ஆண்டுகளுக்கு முன ராக்கெட் ஏவு தளம், கை நழுவி போன பிறகு பிரதமர் நரேந்திர மோடியின 10 ஆண்டு ஆட்சியில் இன்று செயல்பட்டுள்ளது.
இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் நாகபட்டினம்,குலசேகரபட்டினம், கிழக்கு கடற்கரை ஓரத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வாய்ப்பு தமிழகத்திற்க வந்தபோது ராக்கெட் அமைப்பது ஹிரிகோட்டாவா? அல்லது தமிழகமா? என்று இறுதி செய்ய அந்திராவில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. நடத்தபட்ட அந்த நிபுணர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு சர்பாக அப்போதைய முதல்வர் அண்ணா கலந்து கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அந்த கூட்டத்திற்கு தமிழக சார்பில் அனுப்பி வைக்கபட்டவர் அமைச்சர் ஒருவர் காலதாமதாமாக கலந்து கொண்டதால் ராக்கெட் ஏவுதள இட வாய்ப்பு ஆந்திராவின் ஹரிகோட்டாவிற்கு சென்றது. பின,கே.டி. கோசல்ராம் எம்பி 1978 இல் இந்திரா காந்தி காலத்தில் முதல் குரல் கொடுத்தார்அப்போது பறிபோன தமிழர்களின் 55 வருட திட்டம் தற்போது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது,
குலசேகரப் பட்டினம் ஏவுதளம் கலைஞரின் கனவுத் திட்டம் என்கிறார் ‘சிந்தனை சிற்பி’கனிமொழி . குலசேகரப் பட்டினம் ஏவுதளம் கோரி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குகும், முரசொலயில் உடன் பிறப்புக்கு கடிதம் எழுதினார் கலைஞர். ஆனால் கனிமொழி சொல்லும் கலைஞரின் அந்தக் கனவுத் திட்டத்தை திமுக பங்கேற்ற மத்திய அரசு அமைச்சரவையில் நிறைவேற்ற திமுக, பிரதமர் மன்மோகன் சிங் ஆக்கபூர்மாக முயற்சிக்கவில்லை… அவர்களின் கனவுத் திட்டத்தை திமுக கண்டுகொள்வில்லை . இவர்கள் அமைச்சர் பதவியில் மத்திய அரசில் திமுகவினர் இருந்தனர்.