புனித ஹஜ் பயணிகளுக்கு நிதி வழங்க புதுச்சேரி மாநில முதல்வருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
30/04/2024 செவ்வாய்
புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு புதுச்சேரி அரசு அறிவித்த ஊக்க தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு.இஸ்மாயில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இக்கோரிக்கையில் ஹச் பயண பயனாளிகள் அவர்கள் மேற்கொண்ட புனித பயணத்திற்கு தங்களுடைய சொந்த பொருட்செலவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு அரசு அறிவித்த ஊக்க தொகையை அவர்களுக்கு இன்னும் வழங்காதது மிகவும் கண்டனத்திற்கும் வருத்தத்துக்கும் உரியது எனவும் அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.