திருக்கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறப்பதை தடுக்கவும் குளத்தை பாதுகாக்க வேண்டி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஆணையரிடம் மனு
கோவில் குளத்தில் சுகாதார சீர்கேட்டால் அசுத்தம் மற்றும் மாசுபாடு, மீன்கள் இறப்பு, துர்நாற்றம், சாக்கடை கழிவுகள் நீரில் கலப்பதை தடுத்து நிறுத்துதல்- தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி, நங்கநல்லூர் பகுதியில் உள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலய குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிறைய மீன்கள் இறந்து கிடக்கின்றன, மேலும் குளத்தில் வாத்து போன்ற உயிரினங்களும் இருக்கின்றன. இந்த குளத்தில் இருக்கும் தண்ணீரும் அதனுடைய குணத்தை இழந்து நிறத்தையும் இழந்து மிகவும் அசுத்தமாக உள்ளது.
துர்நாற்றம் வீசுகிறது மேலும் வெளியில் இருந்து வரும் சாக்கடை கழிவுகளும் குளத்தில் வந்து சேருகின்றன. மாலை மற்றும் காலை நேரங்களில் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீர் நிலைக்கும் , நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாதவாறு நீர் நிலையை தூய்மை செய்து பாதுகாக்க வேண்டி, குளத்தில் சாக்கடை கழிவுகள் கலக்காதவாறு தடுக்க கோரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சிஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு இரா.மணிவண்ணன் , மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ரங்கராஜன் தலைமையில் , செயல் அலுவலர் இந்து அறநிலைத்துறை மற்றும் உதவி ஆணையர் சென்னை மாநகராட்சி அவர்களிடமும் இது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தேதி :10 /05 /2024 ,நாள் : வெள்ளி, இரா மணிவண்ணன்,காமராஜர் மக்கள் கட்சி