சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் திரு A அருளானந்து தலைமையில் 26/05/2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி நடவடிக்கைகள் மற்றும் பொது சேவைகள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் விவாதங்களும் அடுத்தடுத்த மக்கள் பணி என்னென்ன செய்ய வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் -1
ஜூலை மாதம் 14ஆம் தேதி மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது. பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு முதல் இடம் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ். பெற்றோர்களுக்கு பொன்னாடை போற்றி விழாவும் காரைக்குடியில் நடத்துவது. இதில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் ஐயா அவர்களும் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முடிவெடுக்கப்பட்டது.
தீர்மானம் – 2
காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தில் கிளப் என்ற போர்வையில் கல்யாண மண்டபம் மற்றும் பல பகுதிகளில் மது பாட்டில் விற்பனை செய்வது மற்றும் மது அருந்திவிட்டு சாலை ஓரமாக அந்த கிளப்புகள் இருப்பதினால் விபத்துகளும் ஏற்படுகிறது. அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.
தீர்மானம் -3
சம்பை ஊற்றுக்கு நீர் ஆதாரமாக இருப்பது காரைக்குடி பெரியகம்மாயை தூர்வாரி மழைக்காலங்களில் போதுமான மழை நீரை சேமித்து வைப்பதற்கு உறுதுணையாக வைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.
தீர்மானம் -4
அமராவதி புதூரில் சந்தைப்பேட்டைக்கு நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட பொருளானர் திரு.பூவை சம்பத், மாநகர பொருளாளர் திரு. எஸ். சுரேஷ், வடக்கு மாநகர தலைவர் திரு.வேலுச்சாமி, மாநகர வடக்கு பகுதி செயலாளர் திரு.நாகராஜன், கல்லல் ஒன்றிய பொறுப்பாளர் திரு. எம்.செந்தில் குமார், மாநகர மகளிர் அணி திருமதி.சித்திரா செழியன், மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி எம்.ஆனந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி சங்க செயலாளர் திரு.நந்தகுமார், துணைத்தலைவர் திரு.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் திரு.ராஜா முகமது, மாநகர இளைஞரணி செயலாளர் திரு. மணிகண்டன், இளைஞர் அணி தென் மண்டல துணைச் செயலாளர் திரு.அலெக்ஸ் மற்றும் சிவகங்கை ஒன்றிய பொறுப்பாளர் திரு ராஜ்குமார் , காரைக்குடி தெற்கு பகுதி செயலாளர் திரு நடேசன் , கட்சி நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
நன்றி ,சிவகங்கை, காமராஜர் மக்கள் கட்சி.