காரைக்காலில் குப்பை சேகரிக்கும் வண்டி பெரும்பாலான பகுதிகளுக்கு வருவதில்லை
காரைக்காலில் கடந்த இரண்டு நாட்களாக குப்பை சேகரிக்கும் வண்டி பெரும்பாலான பகுதிகளுக்கு வரவில்லை. இது போல் அடிக்கடி வராமல் இருப்பதே வாடிக்கையாக உள்ளது. இரண்டு நாள், மூன்றுநாள் குப்பைகளை வீட்டில் சேகரித்து வைத்தால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.
அதனால் வீதியில் குப்பைகளை கொட்டும் அவலநிலை ஏற்படுகிறது. வீதியில் ஓரமாக கொட்டினாலும் தெருநாய்கள், ஆடு,மாடுகள் வீதியின் நடுவிற்கு கொண்டு வரும் மோசமான நிலமை ஏற்படுகிறது. தினந்தோறும் குப்பை வண்டிகள் தெருவிற்கு வர நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
காரைக்கால் பெரமசாமிபிள்ளை வீதி, வயல்கரைவீதி சந்திப்பு இங்கு கழிவுநீர் பாதையில் போட்டு இருந்த சிமிண்ட் பிளேட் கழிவு நீர் பாதையில் மூழ்கி உள்ளதால் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது, நடந்து செல்பவர்கள் செல்லமுடியாத நிலை உள்ளது, கழிவு நீர் பாதையில் குழி ஏற்பட்டு உள்ளது!! இது இரவில் அவ்வழியே செல்வோருக்கு ஆபத்தை விளைவிக்கும் காரை நகராட்சி உடன் கவனித்து நடவடிக்கை காமராஜர் மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.