காமராஜர் மக்கள் கட்சி முயற்சியால் சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி வார்டு எண் 128 இல் மின்மாற்றி அருகே கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்
சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி வார்டு எண் 128 தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் உயர் ரக மின் மாற்று முனையத்திடம் தேவையற்ற கழிவுகள் மற்றும் குப்பைகள் ,கட்டிட கழிவுகள் முறைகேடாக கொட்டப்பட்டு
போக்குவரத்துக்கு இடுவராக இருந்து கொண்டு வந்தது.
இதை கண்டறிந்து காமராஜர் மக்கள் கட்சி தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சிக்கும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும் சுமார் ஆறு முறைக்கு மேல்இணையதளம் மூலம் மனு கொடுத்தது. மனுவின் நிலை அறிந்து கொண்டு தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
தூய்மைப் பணி முழுமையாக நடைபெறாமல் பாதி அளவு மட்டுமே நடைபெற்று உள்ளது.தொடர்ச்சியாக இந்த கழிவுகள் அகற்ற தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டு வருகிறது.
நன்றி, காமராஜர் மக்கள் கட்சி, தகவல் தொழில் நுட்ப அணி