காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு பிரச்சனைகளுக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
கும்பகோணம் சாக்கோட்டையில் தொடங்கி காரைக்கால் கடற்கரை வரை பயணிக்கும் அரசலாறு பல்லாயிரக்கணக்கான நிலங்களுக்கு பாசன வசதியை கொடுப்பதுடன், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
புனித நதியாக பாவிக்கப்படும் அரசலாறு, தனது புனித தன்மையை காரைக்காலில் இழந்து குப்பைக்காடாக காட்சியளிக்கிறது.
கரையின் இருபுறமும் குப்பைமேடுகள்,கரையின் ஓரத்தில் உள்ள கருவேல மரச்செடிகளை வெட்டும் பொதுப்பணி துறை சேர்ந்தவர்கள் அவைகளை அகற்றாமல் ஆற்றிலேயே விட்டு விடுவது. இதே நிலை வாஞ்சு ஆற்றிலேயும்,கடற்கரை பூங்கா எதிரே ஆற்றிலேயும் குப்பை அதனாலேயே மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ” அரசலாறு மிகவும் மாசடைந்த ஆறு” என அறிவித்து உள்ளது.ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள குப்பை மேடுகளை அகற்றவும், வெட்டிப்போடப்பட்டுள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தவம் மாவட்ட நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
புதுச்சேரி பிறப்பு, இறப்பு,திருமண பதிவு சட்டத்தின்படி 1800ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிறப்பு,இறப்பு,திருமண பதிவேடுகள் இரண்டு தயார் செய்யப்பட்டு வருடமுடிவில் அதன் அசல் பதிவேடு அலுவலக பராமரிப்புக்கும், நகல்பதிவேடு நீதிமன்ற பாதுகாப்பிற்கு அனுப்புவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. கடந்த 22ஆண்டுகளாக திருமண பதிவேடுகள் நீதிமன்ற பாதுகாப்பிற்கு அனுப்பபடாமலேயே உள்ளது. இது சம்மந்தமாக கேட்டால் அப்போதைய பணியில் இருந்த ஒரு சில ஆணையர்கள் அப்பதிவேடுகளில் கையெழுத்து போடாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படிப்பட்ட பதிவேடுகளை கேட்டுவரும் பொதுமக்கள் அலக்கழிக்கப்படுகிறார்கள். தற்போதைய காலத்தில் பாஸ்போர்ட் எடுக்க, விசா விண்ணப்பிக்க, வங்கி கணக்கு தொடங்க,சொத்து பரிவர்த்தனை செய்ய முக்கியமாக திருமண பதிவு தேவைப்படுகின்றது. அது கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் அலக்கழிக்கப்படுவது நியாயமா? இது பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினையாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் முக்கிய கவனம் செலுத்தி உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும்,
காரைக்கால் கடற்கரை சாலை, விக்ரம் சாராபாய் சாலை, புனித லெயோன் சேன்ழான் சாலைகள் என் 5கி.மீ சாலைகளையும், அரசலாற்று தடுப்பு சுவரையும் புரணமைப்பு பணிக்காக மத்திய சாலை கட்டமைப்பு நிதியிலிருந்து 5கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பொதுப்பணி துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டு பணியாணை வழங்கிய நிலையில் 2023 ஜனவரி மாதம் அதற்கான பணி தொடங்கியது, ஏறக்குறைய 18மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் பணி நிறைவு பெறவில்லை, மந்தநிலையிலேயே நடந்து வருகிறது.பல இடங்களில் பழைய தடுப்பு சுவர்கள் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது காரைக்கால் கடற்கரை, கடற்கரைக்கு வரும் சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கிறது மின் துறை கவனிக்க வேண்டும் எனவும்,
காரைக்கால் நகரின் மையப்பகுதியில் உள்ள வடிவாய்க்கால்கள் தூர்வாராமல் ஆகாய தாமரை, கோரைப்புல் ஆள் உயரத்திற்கு வளர்ந்து உள்ளது.சிறிய மழை பெய்தால் கூட நகரின் மைய பகுதியில் மழைநீர் தேங்கி நின்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் உடனே வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக தூர்வார பொதுப்பணி துறை நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும்,