சிவகங்கை மாவட்டம் சார்பாக காமராஜர் பிறந்த நாள் மாபெரும் விழா

14/07/2024

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கட்சி கொடி ஏற்றுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல்,

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த (தமிழ் வழி) தேர்ச்சி பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விழாவில் காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு பா.குமரய்யா அவர்கள் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் திரு அருள்

ஆனந்த் இணைந்து பயனாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகளும் உதவி பொருட்களும் வழங்கப்பட்டது.

சுமார் 160 பயனாளிகள் இதன் மூலம் பயன் பெற்றனர். விழாவில் சிவகங்கை மாவட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாவட்ட துணைத் தலைவர்

மற்றும் பொருளாளர் நிர்வாக அணிகள் இளைஞர் மகளிர் அணி தொண்டர் அணி என அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை செலுத்தினர்.

200 நபர்களுக்கு மேல் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவருக்கும் மதிய சைவ உணவு வழங்கப்பட்டது.நிறைவாக விழாவில் முக்கிய பணிகள் செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவுப் பரிசு

வழங்கப்பட்டது. நன்றியுரை திரு அருளானந்த் மாவட்ட தலைவர் அவர்கள் வழங்கினார்.நிறைவாக நாட்டுப்பண் பாடப்பட்டு விழா நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *