கருவேலக்காடுகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்
காரைக்கால்
இரயில், பேருந்து,கார்களில் காரைக்காலை கடந்து போகிற வெளியூர் பயணிகள் குறைந்தது 3மணி நேரமாவது காரைக்காலில் மகிழ்வுடன் நேரத்தை செலவிட்டு செல்லும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள அலையாத்தி காடுகளோடு, ஓசோன் பூங்கா மற்றும் பொழுது போக்கு சாதனங்களைஉருவாக்கும் பணிகளும் நடைபெறும் என்றது. ஆனால் இது நாள் வரை பேச்சு பேச்சாகவே உள்ளது.அலையாத்தி காட்டில் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதுடன் உள்நாட்டு பறவைகளான கொக்கு,மடையான், நாரை போன்ற பறவைகளும் தங்கும்! அலையாத்தி காடுகளை சுற்றி கருவேலக்காடுகள் உள்ளது.
வெளிநாட்டு பறவைகள் கருவேலக்காடுகளில் தன் இறகுகளை இழந்து போகிறது கருவேலக்காடுகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.கடற்கரை பூங்காவில் அரசு சார்ந்த கடை(சீகல்ஸ்) சற்று விலை மலிவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வரும் சுற்றுலா பயணிகளிடம் MRP விலையை விட அதிகமான விலைக்கு பொருள்களை விற்பனை செய்கிறார்கள். 20 ரூபாய்- தண்ணீர் பாட்டில் 30ரூபாய்,35ரூபாய்-ஆப்பிள் ஜூஸ் 50ரூபாய்,10ரூபாய்- பாப்கான்(பாக்கெட்) 20ரூபாய்
அனைத்து பொருளும் விலை கூடுதலாக விற்பனை செய்கிறார்கள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.