SRM கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரிடம் தலைவர் தமிழருவி மணியன் மாபெரும் உரை
தலைவர் தமிழருவி மணியன் அவர்களுக்கு SRM கலை அறிவியல் கல்லூரி – சென்னை காட்டாங்கொளத்தூர் நிறுவனங்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் மாபெரும் உரையாற்றினார். நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து உடன் ஆரம்பித்தது.
முன்னதாக தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேராசிரியர்கள் கல்லூரியின் வரலாறு மற்றும் கல்வி நிலையத்தின் பெருமைகளையும், சாதனைகளையும் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் பற்றின வாழ்க்கை குறிப்பையும் வாசித்தனர்.
2024 மற்றும் 2027 வகுப்புகளுக்கான SRM கலை அறிவியல் கல்லூரி – சென்னை காட்டாங்கொளத்தூர், மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு அறிமுக கூட்டத்தில் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் பங்கு பெற்று மாணவர்களுக்கான நெறிமுறைகளையும்
வாழ்க்கையில் முன்னேற புத்தகங்களின் முக்கியத்துவம், சமூக வளர்ச்சி,பெற்றோரை எப்படி பாதுகாக்க வேண்டும், தமிழ் மொழியின் சிறப்புகள், வரலாற்று நிகழ்வுகள், என பல்வேறு தகவல்களை மாணவர்கள் முன் தனது கருத்துக்களை முன்வைத்து பேசினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் கல்லூரியின் தாளாளர் பேராசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக தலைவர் அவர்களுக்கு நினைவு பரிசுகளையும், தலைவர் அவர்கள் மாணவ மாணவியருக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.