காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக மாணவ, மாணவிகள், பொதுமக்களிடத்தில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் அருளானந்து,துவக்கி வைத்தார்
26/09/2024
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக பள்ளி கல்லூரிகள், நேரங்களில் கூடுதல் பேருந்து, சுற்றுவட்ட பேருந்துகள், இயக்க வலியுறுத்தி. மாணவ, மாணவிகள், பொதுமக்களிடத்தில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் அருளானந்து,துவக்கி வைத்தார்.
இளைஞரணி மாவட்ட செயலாளர் எம் மணிகண்டன், தென் மண்டல இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.அலெக்ஸ், மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், மற்றும் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் இடத்தில் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியர் போக்குவரத்து மேலாளர், எம்எல்ஏ அவர்களிடம் மனுவாக கொடுப்பதற்காக. 24.09.2024.இன்று காலை காரைக்குடி நகர்
கழனிவாசல் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
2023 ஆண்டு மனு கொடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால். மீண்டும் மனு கொடுக்கப்படுகிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால். காமராஜர் மக்கள் கட்சி இளைஞரணி சார்பாக மாணவர்களுக்கு சரியான
நேரத்தில்,சரியான பஸ் கிடைப்பதில்லை. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மாணவர், மாணவர்களுக்காக பாதுகாப்பு கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க செய்யவில்லை என்றால் மாணவ,மாணவிகள் இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களை திரட்டி காமராஜர் மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக பெரும் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தப்படும். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.