காரைக்கால்-பேரளம் இரயில் பாதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள்


1/9/2024

காரைக்கால்-பேரளம் இரயில் பாதை பிரிட்டிஷ் அரசாங்கமும், பிரெஞ்சு அரசாங்கமும் இணைந்து உருவாக்கி 1898ம் ஆண்டு,மார்ச் மாதம்14ந்தேதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
ஏறக்குறைய 89ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இரயில் பாதை கடந்த 37ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், காரைக்கால் புறக்கணிப்பை அன்றே தொடங்கியதாலும் 1987ம் ஆண்டு இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், இருப்பு பாதைகளும் அகற்றப்பட்டது.


நீண்டகாலம் பலவகையான போராட்டங்களுக்கு பின் காரைக்கால்- பேரளம் இரயில்பாதை ரூ177கோடி மத்திய அரசு ஒப்புதலுடன் 2022ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட பணி மின்மயமாக்கலுடன் ரூ320.64கோடியில் நடைப்பெற்று வருகிறது.

அசுரவேகத்தில் தொடங்கப்பட்ட பணி தற்போது ஆமையை விட மெதுவான வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பாரதியார் வீதி, காமராஜர் சாலை, சிங்கார வேலவர் சாலை, பிள்ளை திருவாசல் பகுதிகளில் தொடர் போக்குவரத்து இடையூறும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது இப்பகுதிகளில் சாலையோர பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படாமலேயே உள்ளது மக்களுக்கும்,வாகன ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு அற்ற நிலை உள்ளது! மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும்,


இப்பணி தொடங்கும் போது “காரைக்கால்- பேரளம் அகல இரயில் பாதை திட்டம்” 18மாதங்களில் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்து விடும்” என்று முதன்மை பொறியாளர் திரு காளிமுத்து கூறினார்கள், தற்போது 32மாதங்கள் கடந்த நிலையில் 75%சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது! இத்திட்ட பணியில் மந்தநிலையும், தேக்க நிலையும் சூழ்ந்து உள்ளது! புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு காரைக்கால்-பேரளம் அகல இரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,


காரைக்கால் இரயில் நிலையத்தை சீரமைப்புப் செய்து, மேம்படுத்துவதற்கு “அம்ரித் பாரத் திட்டத்தின்” கீழ் ரூ 5.37கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2023 நவம்பர் மாதம் பணி தொடங்கியது அதுவும் தேக்கநிலையிலும், மத்தகதியிலும் உள்ளது, அந்த பணியையும் விரைந்து முடிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *