தமிழகம், காரைக்கால் பகுதிகளில் 77% சதவீதம் நிலத்தடி நீர் வளம் அழிந்து விட்டதாக “மத்திய நிலத்தடி நீர் வாரியம்” அறிவிப்பு
5/09/2024
அண்டை மாநிலமான தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் 463 இடங்கள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் காரைக்காலுக்கு அருகே உள்ள மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி போன்ற ஊர்களும் அடங்கும்.
காரைக்காலுக்கு அருகாமையில் உள்ள நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களில் நிலத்தடி நீர் உப்பு தன்மை அதிகரித்து இருப்பதும், தமிழகம் 77% சதவீதம் நிலத்தடி நீர் வளத்தை அழித்து விட்டதாக “மத்திய நிலத்தடி நீர் வாரியம்” அறிவித்தது.
நம் மாவட்டத்தின் எதிர்கால தலைமுறையினரை குடிநீர் தட்டுப்பாடு என்னும் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றும் விதமாக எதிர்கால நலன்கருதி “தொலைநோக்கு பார்வையுடன்” மாவட்ட நிர்வாகம் செயல்பட காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
மாவட்டத்தின் நிலத்தடிநீர் மட்டம் மேலோங்க , வரும் பருவமழை காலத்தில் குளம், குட்டை, ஏரிகளில் மழைநீரை சேகரிக்க வழிவகை செய்வதுடன் அனைத்து அரசு கட்டிடங்கள், தனியார் தொழிற்சாலைகள், தனியார் கல்லூரி, பள்ளிகள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து வீடுகளிலும் “மழை நீர் சேகரிப்பு தொட்டி” அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயர மாவட்ட நிர்வாகம் தொலைநோக்கு பார்வையுடன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
நன்றி ஏ.எம்.இஸ்மாயில்,காரைக்கால் பொதுச்செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி