முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.ம.துரைசிங்கம் அவர்கள் நியமனம்
6/09/2024
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர்,மற்றும் முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிடும்படியாக பரவலாக உள்ளனர்.
முடிமன்னார்கோட்டை, நீராவி, கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலாகப்ரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம் மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள் உள்ளன.
இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.
முதுகுளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி, பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி, பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி, கண்ணா மெட்ரிக் பள்ளி, பள்ளிவாசல் மெட்ரிக் & நர்சரி பள்ளி உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன.முதுகுளத்தூர் நகரில் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. ஐ.டி.ஐ.அரசு தொழிற்பயிற்சி பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது.
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு ம.துரைசிங்கம் (97878 43341) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.